திருமணத்திற்குப் பிறகு குழந்தை குறித்த திட்டம் ஒவ்வொரு தம்பதிக்கும் மாறுபடும். குழந்தைக்காக முயற்சி செய்யத் தொடங்கிய பிறகு, “எவ்வளவு காலம் முயற்சி செய்த பிறகு Fertility Specialist-ஐ சந்திக்க வேண்டும்?” என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். சரியான நேரத்தில் Fertility Consultation in Madurai பெறுவது, கணவன் மனைவி இருவரின் fertility health பற்றி புரிந்துகொண்டு, குழந்தைப்பேறுக்கான அடுத்த கட்டத்தை தெளிவாகத் திட்டமிட உதவும். வயதுக்கு ஏற்ப எப்போது Fertility Consultation பெறலாம்? கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பில் பெண்ணின் வயது முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். அதனால் fertility consultation பெறுவதற்கான காலமும் வயதுக்கு ஏற்ப மாறுகிறது. 35 வயதிற்குக் கீழ் உள்ள பெண்கள் , தொடர்ந்து குழந்தைக்காக முயற்சி செய்து வந்தால் பொதுவாக 12 மாதங்களுக்குப் பிறகு fertility evaluation குறித்து மருத்துவரிடம் ஆலோசிக்கலாம். 35 வயது அல்லது அதற்கு மேல் உள்ள பெண்கள் , சுமார் 6 மாதங்கள் முயற்சி செய்த பிறகு fertility consultation பெறலாம். 40 வயதிற்கு மேல் கர்ப்பம் தரிக்க திட்டமிடுபவர்கள் ஆரம்பத்திலேயே மருத்துவரை அணு...